குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
2016ல் வெளிவந்த ''துருவங்கள் 16' படம் மூலம் இளம் வயதில் இயக்குனராக திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தவர் கார்த்திக் நரேன். அந்தப் படத்தை அடுத்து அவர் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தயாரிப்பில் 'நரகாசூரன்' படத்தை இயக்கினார். இருவரும் அந்தப் படத்தில் இணைந்ததற்காக மிகப் பெரும் பில்டப்புகளையெல்லாம் கொடுத்தனர். ஆனால், கடைசியில் படம் முடிந்து கடந்த 4 வருடங்களாகியும் வெளிவரவில்லை.
கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கல் தான் அதற்குக் காரணம். தனது படம் வெளிவராமல் போனது குறித்து பல விதமான கமெண்ட்டுகளைக் கொடுத்தார் கார்த்திக் நரேன். அதன்பின் படத்திலிருந்து முழுமையாக விலகினார் கவுதம் மேனன்.
எப்படியோ ஒரு வழியாக சிக்கல்கள் எல்லாம் முடிந்து தற்போது சோனி லிவ் ஓடிடி இப்படத்தை வாங்கியுள்ளதாம். நேற்று 'வாழ்' படம் மூலம் தனது முதல் நேரடி வெளியீட்டை ஆரம்பித்த அந்த நிறுவனம் அடுத்து 'நரகாசூரன்' படத்தை நேரடி வெளியீடாக ஆகஸ்ட் 13ம் தேதி வெளியிட உள்ளதாம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள்.
கார்த்திக் நரேன் தற்போது தனுஷ் நடிக்கும் 43வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் தற்போது சில சர்ச்சை எழுந்து வருகிறது. விரைவில் அது வெளியில் வெடிக்கலாம் என்கிறார்கள்.