‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ராஜா தயாரித்துள்ள கோடியில் ஒருவன் படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கி உள்ளார். ஆத்மிகா நாயகியாக நடித்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, ஒளிப்பதிவினை என்.எஸ்.உதயகுமார் கவனித்துள்ளார். மேலும் இப்படத்தின் எடிட்டிங்கை வேலையை விஜய் ஆண்டனியே கவனித்துள்ளார்.
இப்படம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், ''கொலைகாரன் படத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் அருமையான படத்தை தந்துள்ளார். எதிர்காலத்தில் இவருடன் இன்னும் பல படங்களில் நடிப்பேன். ஆத்மிகாவுடன் நடித்ததில் மகிழ்ச்சி . அவர் ஒரு திறமையான நடிகை கூட. நிவாஸ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது சமீபத்தில் வெளியான மெலோடி பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது'' என்றார்.
ஆத்மிகா கூறுகையில், ''கொரோன காலகட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த அடுத்த தருணமே இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்கள். படப்பிடிப்பை நம்பி வாழும் ஊழியர்களையும், தொழிலாளர்களையும் மனதில் வைத்து விஜய் ஆண்டனி நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார். இவர் ஒரு ரியல் லைப் ஹீரோ. இப்படத்தில் போஸ்டர்களில் ஹீரோவுக்கு இணையாக என் பெயரையும் சேர்த்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்'' என்றார்.
ஆனந்த் கிருஷ்ணன் கூறுகையில், ''கோடியில் ஒருவன் படத்தில் ஆண்டனி டியூசன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெட்ரோ படத்தை பார்த்து எனக்கு இந்த படத்தை இயக்க வாய்ப்பளித்தார். இந்த படத்தில் அரசியலால் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், சிக்கலையும் மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க ஒரு ஜனரஞ்சகமான விறுவிறுப்பான படம்'' என்றார்.
தனஞ்செயன் கூறுகையில், ''கோடியில் ஒருவன் ஒரு பாசிட்டிவான படத்தலைப்பு விஜய் ஆண்டனிக்கு அமைந்துள்ளது.. ஆனந்த கிருஷ்ணன் திறமையான இயக்குனர். இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார். முதன்முதலாக எடிட்டராக அவதாரம் எடுத்துள்ளார். படத்தின் முதல் பாதியை அருமையாக வந்துள்ளது இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம்'' என்றார்.