தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தனுஷ் தற்போது இயக்கி நடித்திருக்கும் படம் ‛இட்லி கடை'. அவருடன் நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று கோவையில் உள்ள ஒரு மாலில் இந்த இட்லி கடை படத்தின் டிரைலர் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, ‛‛இந்த இட்லி கடை ரொம்ப சிம்பிளான ஒரு சாதாரணமான படம். உங்கள் குடும்பத்தோடு குழந்தைகளோடு தியேட்டருக்கு சென்று ரசித்து எமோஷனலாக பார்க்கக்கூடிய ஒரு படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என பல சீனியர்கள் நடித்துள்ளார்கள்.
நான் சொல்லும் விஷயங்களை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். அவர்களுக்கு ரொம்பவே நான் கடமைப்பட்டுள்ளேன். சிறு வயதில் இருந்தே எனக்கு சமையல் கலைஞன் ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. அந்த ஆசை எனக்கு இருந்ததினால் தானோ என்னவோ தொடர்ந்து சமையல் சம்பந்தப்பட்ட கதைகளாகவே கிடைத்து வருகிறது. ஜகமே தந்திரம் படத்தில் புரோட்டா போட்டேன். திருச்சிற்றம்பலம் படத்தில் டெலிவரி பாயாக இருந்தேன். ராயன் படத்தில் பாஸ்ட் புட் வைத்திருந்தேன். இந்த படத்தில் இட்லி கடை வைத்திருக்கிறேன். எனக்காக நான் எழுதும் கதைகள் மட்டுமின்றி மற்ற இயக்குனர்களும் அதுபோன்ற கதைகளுடனேயே என்னை தேடி வருகிறார்கள்.
என்ன நினைக்கிறோமோ அதுவாக நாம் மாறுகிறோம். அதாவது எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வது போன்று. நான் நடிகரான பிறகும், சமையல் கலைஞன் ஆக வேண்டுமென்ற என்னுடைய ஆசை என்னை துரத்திக் கொண்டே வருகிறது. அதனால் இளைஞர்களும் வாழ்க்கையில் நம் எண்ணம் சாதிக்க வேண்டும் என்பதை நோக்கியே செல்ல வேண்டும். நம்மை முதலில் நம்ப வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் யார் வேண்டுமானாலும் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியும். அதற்காக அனைவரும் ஒர்க்கவுட் செய்யுங்கள். அப்படி செய்தால் நீங்கள் நினைத்ததை எளிதில் சாதிக்க முடியும். நான் கருத்து சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம். என் வாழ்க்கையில் நடந்ததை உங்களுக்கு சொல்கிறேன். கண்டிப்பாக இதை எல்லாம் நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
ரசிகர்கள்
என்னுடைய ரசிகர்கள் யாருடைய வம்புக்கும் செல்ல மாட்டார்கள். அதில் எனக்கு பெரிய கர்வமும் சந்தோஷமும் உள்ளது. மேலும் ஒரு படம் ரிலீஸ் அன்று 9:00 மணிக்கு தியேட்டரில் திரையிடப்படுகிறது என்றால், 12 மணிக்கு மேல் தான் விமர்சனங்கள் வரும். ஆனால் சில விமர்சனங்கள் 8 மணிக்கே வந்து விடும். அப்படி வரும் விமர்சனங்களை யாரும் நம்பாதீர்கள். நீங்கள் படத்தை பார்த்துவிட்டு எப்படி இருக்குது என்று சொல்லுங்கள். இல்லை உங்கள் நண்பர்கள் படத்தை பார்த்துவிட்டு சொல்வதை வைத்து படத்தை பாருங்கள். சினிமாவை நம்பி நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் எல்லோரது படமும் ஓட வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளது. சரியான விமர்சனங்களை பார்த்துவிட்டு அந்த படங்களை பார்க்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்'' என்றும் பேசினார் தனுஷ்.