மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

லவ் டுடே, டிராகன் படங்களை அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கார்பரேசன். சுருக்கமாக எல்ஐகே. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கிறது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது ரஜினியின் கூலி படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் ரிலீஸ் நாளை நடைபெற இருப்பதால், இந்த நேரத்தில் எல்ஐகே.,வின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டால் எதிர்பார்த்தபடி ரசிகர்களை போய் சேராது என்பதால், மாற்று தேதியில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதனால் தலைவர் தரிசனம் முடிந்தவுடன் எல்ஐகே கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளார்கள்.