வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் |

தென்னிந்திய அளவில் தற்போதும் நம்பர் ஒன் கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா தான். அவரைப் பற்றி சமீப காலமாக பல சர்ச்சையான செய்திகள் வெளியாவதை தான் பார்க்க முடிகிறது. அதே சமயம் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் யோகி பாபு, நயன்தாரா பற்றி கூறிய விஷயம் ஒன்று ரொம்பவே ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' என்கிற படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, அந்த படத்தில் கதையின் நாயகன் என்றால் யோகி பாபு தான். முதலில் ஒரு சாதாரண நகைச்சுவை நடிகருக்கு ஜோடி என்பது போல இணைந்து நடிப்பதற்கு அவர் ஒத்துக்கொண்டதே பெரிய விஷயம். ஆனால் யோகிபாபு சாதாரண நடிகர் என்று அவர் ஒருபோதும் நினைத்தது இல்லையாம். அப்படி அந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை யோகி பாபு சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
''ஒரு காட்சியில் வாகனத்தில் செல்லும்போது அது ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கும்போது நயன்தாராவின் கால் என் முகத்தில் வந்து உதைப்பது போல படமெடுக்க வேண்டும். ஆனால் எவ்வளவு சொல்லியும் நயன்தாரா என் முகத்தில் தன்னுடைய காலால் உதைப்பதற்கு, அவ்வளவு ஏன் காலால் முகத்தில் தொடுவதற்கு கூட முடியாது என்று பிடிவாதம் காட்டினார். ஆனாலும் நெல்சன் இந்த காட்சி ரொம்பவே முக்கியமானது, நன்றாக வரும் என்று சொன்ன பின்னர் தனது கால்களை சுத்தப்படுத்தி அதில் வாசலைன் தடவிக் கொண்டு அந்த காட்சியில் என் முகத்தில் கால் பட்டும் படாமல் படுவது போல வேறு வழி இன்றி நடித்தார் நயன்தாரா. அப்போது கூட தனது காலில் இருக்கும் தூசி என் முகத்தில் பட்டுவிடக் கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்தார் நயன்தாரா'' என்று பிரமிப்பு விலகாமல் கூறியுள்ளார் யோகி பாபு.