லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‛டிடி நெக்ஸ்ட் லெவல்'. இப்படத்தில் அவருடன் இயக்குனர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் மற்றும் கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, கஸ்தூரி, லொள்ளு சபா ஜீவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற மே மாதம் 16ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது கலந்து கொண்டு வருகிறார் சந்தானம்.
இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானத்தின் அம்மாவாக கஸ்தூரி நடித்திருக்கிறார். இதுகுறித்து சந்தானம் கூறுகையில், ‛‛கஸ்தூரி இடத்தில் அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்றதும், சந்தானத்திற்கு என்னை அம்மாவாக நடிக்க சொல்வதா? எனக்கென்ன அவ்ளோ வயதா ஆகிவிட்டது என்று அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதையடுத்து கதையைக் கேட்டுவிட்டு முடிவை சொல்லுங்கள் என்று இயக்குனர் அவரிடத்தில் மொத்த கதையும் சொன்னதும் உடனே சம்மதம் தெரிவித்தார். காரணம் இந்த படத்தில் அவர் நடிக்கும் அம்மா கேரக்டர்தான் கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது'' என்கிறார் சந்தானம். மேலும், தற்போது சந்தானத்திற்கு 45 வயதும், கஸ்தூரிக்கு 50 வயதும் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.