மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது இந்த இருவருக்குமே மிகப்பெரிய பிரபலத்தை ரசிகர்களிடம் தேடிக் கொடுத்தது. அது மட்டுமல்ல இந்த படத்தில் இசையமைப்பாளராக மிகச்சிறந்த பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வரும் ரசிகர்களிடம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் இந்த படத்தின் ரீமேக் ஆக உருவான கபீர் சிங், அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தீப் ரெட்டி, ரன்பீர் கபூர் கூட்டணியில் உருவான அனிமல் ஆகிய படங்களுக்கு ஹர்ஷவர்தன் இசையமைத்தார்.
இந்த நிலையில் தற்போது முதன்முதலாக மலையாள திரையுலகில் 'அனோமி' என்கிற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கிறார் ஹர்ஷவர்தன். இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ள பிரபல நடிகை பாவனா, தனது பாவனா பிலிம்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாகவும் அவரே நடிக்கிறார். கதையின் நாயகனாக நடிகர் ரகுமான் நடிக்கிறார். இந்த படத்தை ரியாஸ் மரமத் என்பவர் எழுதி இயக்குகிறார். ஹர்ஷவர்தனை மலையாள திரை உலகிற்கு அனோமி படம் மூலமாக வரவேற்பதாக தனது சோசியல் மீடியா பார்க்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவரை வரவேற்றுள்ளார் நடிகை பாவனா.