ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' | அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் |

ராஜ்யசபா எம்பி ஆகிவிட்ட நடிகர் கமல்ஹாசன், முதன்முறையாக அரசு முத்திரை பதித்த லட்டர் பேட்டில் நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசனை பாராட்டி, ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் எம்பி ஆனபின் முதல் கையெழுத்தும் இதுதான் என்று கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு நடந்த அகரம் 15 ஆண்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், என்னை சித்தப்பா என அழைப்பதா? அண்ணன் என அழைப்பதா என சூர்யா புகழ்கிறார். நான் அவரை தம்பி என அழைப்பதா? அண்ணன் என அழைப்பதா என யோசிக்கிறேன் என்று பேசினார்.
மேலும் என் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாற, அண்ணன் சிவகுமார்தான் காரணம். அந்த காலத்தில் அவர் நமக்கு எதுக்கு ரசிகர் மன்றம் என கேட்டார். பாலசந்தரால் நான் நட்சத்திர அந்தஸ்து பெற என் மீது பாசத்தில் வந்தவர்களை நற்பணி மன்றத்தில் சேர்த்தேன் என்றார். மேலும் அகரம் பவுண்டேசன் பற்றி சமீபத்தில் முதல்வரிடம் கூட பேசினேன். இவர்களை போன்றவர்கள் பணம் கேட்கவில்லை. அனுமதிதான் கேட்கிறார்கள் அரசு உதவி செய்ய வேண்டும் என்றேன் என்றார்.
சூர்யா குடும்பம் கமல்ஹாசன் நட்பு அதிகமாகி வருவதால், வருங்காலத்தில் சூர்யா அல்லது கார்த்தி இருவரில் ஒருவர் 'கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் முழுநீள ஹீரோ வேடத்தில் நடிக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது.