ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

சமீப காலமாக சோசியல் மீடியாவில் தன்னைப் பற்றிய கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் இயக்குனர் செல்வராகவன், தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், ஏழு முறை தான் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், உலகம் முழுக்க பார்த்தால் வாழ்க்கையில் இந்த இரண்டையும் முயற்சிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஒன்று தற்கொலை முயற்சி. இன்னொன்று டிப்ரஷன். நான் இதுவரை ஏழு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.
ஒவ்வொரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்யும்போதும் எனக்குள் ஒரு குரல் கேட்கும். ஏதோ சொல்வது மாதிரி, ஏதோ கேட்கிற மாதிரி இருப்பதை உணர்வேன். நம்மிடத்தில் கடவுள் தான் ஏதோ சொல்லுகிறார் என்று நினைத்து தற்கொலை முயற்சியை கைவிட்டு விடுவேன். ஒரு ஆறு மாதம், ஒரு வருடம் கழித்து வாழ்க்கையில் திடீரென்று மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும். அப்போ நாம் தற்கொலை செய்து இருந்தால் இந்த சந்தோசத்தை இழந்திருப்போமே என்று நினைத்துக் கொள்வேன்.
வாழ்க்கையில் இது தான் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களின் உண்மையான நோக்கம். அடுத்த ஜென்மத்தில் நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதாக தான் இருக்கும். சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு குடியிருப்பில் பிறந்து சந்தோஷமா வாழ வேண்டும் என்று நினைப்போம். ஆனால் கூவத்தில் பிறந்து பன்னியாகவோ காட்டில் மரத்தில் தொங்கும் பேயாகவோ பிறந்தால் யார் என்ன செய்ய முடியும்.
நமக்குள் கேட்கும் குரல் கடவுளின் குரலாகவோ அல்லது வேறுநபரின் குரலாகவோ கூட இருக்கலாம். அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் அந்த குரல் உங்களுக்குள் கேட்காமல் இருக்காது. அது உண்மையானது என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.




