பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். அவரது பயோபிக் படமாக உருவாகியுள்ள 'அமரன்' படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்காக சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படக்குழுவினர் சென்று படத்தை புரமோஷன் செய்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே, டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று வீர வணக்கம் செலுத்தியுள்ளார் சாய் பல்லவி. “அமரன்' படத்திற்கான புரமோஷனை ஆரம்பிப்பதற்கு முன்பாக தேசிய போர் நினைவிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்றேன். நமக்காகத் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ஒவ்வொரு துணிச்சலான இதயத்தின் நினைவாக இந்த புனிதமான கோவிலில் ஆயிரக்கணக்கான 'செங்கல் போன்ற மாத்திரைகள்' உள்ளன. மேஜர் முகுந்த் வரதராஜன், சிப்பாய் விக்ரம்சிங் ஆகயோருக்கு மரியாதை செலுத்தும் போது நான் உணர்ச்சிகளால் நிறைந்திருந்தேன். நன்றி மற்றும் வீர வணக்கங்கள்,” என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.