படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த் | அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் | ஹீரோ ஆனார் ரோபோ சங்கர் | மற்றுமொரு ஓடிடி தளத்தில் ‛ஹிட் லிஸ்ட்' | பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே | மும்பையில் பரோஸ் டிரைலர் வெளியீடு : சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அக்ஷய் குமார் |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ்குமார். நாயகனாக நடிக்க ஆசைப்பட்டு கடந்த சில வருடங்களாக நடித்தும் வருகிறார். நடிப்பில் குறிப்பிடும் அளவில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை என்றாலும் அவருடைய இசையில் கோட்டை விடாமல் இருக்கிறார்.
இந்த வருட தீபாவளி, ஜிவிக்கு டபுள் தீபாவளி. தமிழில் 'அமரன்' படமும், தெலுங்கில் 'லக்கி பாஸ்கர்' படமும் வெளியாக உள்ளது. இரண்டு படங்கள் மீதே எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
“அமரன், லக்கி பாஸ்கர்,' ஆகிய படங்கள் அந்தந்த மொழிகளில் ப்ளாக் பஸ்டர் ஆவதற்கான வேரூன்றி உள்ளது. இரண்டு படங்களையும் பார்த்த பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். மிக்க நன்றி,” என ஜிவி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் தமிழில் 'கேப்டன் மில்லர், தங்கலான்' ஆகிய படங்கள் ஜிவியின் இசையைப் பற்றிப் பாராட்டிப் பேச வைத்த படங்கள். அது போல 'அமரன், லக்கி பாஸ்கர்' படங்களும் அமையலாம்.