'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் | பாடல்களில் ஆடியே பிரபலமானேன் என்கிறார் தமன்னா | விரைவில் மறுமணம் செய்யப் போகிறாரா சமந்தா | இவர்கள் தான் எனது ரோல் மாடல் என்கிறார் சாந்தனு | நாளை ஓடிடியில் வெளியாகும் அனுஷ்காவின் காட்டி | கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” |
தீபாவளித் திருநாளான அக்டோபர் 31ம் தேதி 'அமரன், ப்ளடி பெக்கர், பிரதர்' ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்த மூன்று படங்களுக்குமே முன்பதிவு ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இந்நிலையில் 'பிரதர்' படத்தை வெளியிடக் கூடாது என பிரபல பாலிவுட் வினியோக நிறுவனமான கோல்டுமைன் நிறுவனம் மும்பை நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த நிறுவனத்திடமிருந்து 'பிரதர்' தயாரிப்பு நிறுவனமான ஸ்க்ரீன் சீன் நிறுவனம் 7 கோடி ரூபாயைப் பெற்றிருந்தார்களாம். அதற்கான வட்டியுடன் சேர்த்து 21 கோடி ரூபாயைத் தர வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தடை உத்தரவுக்குப் பிறகு ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தினர் மும்பை சென்று கோல்டுமைன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். வட்டித் தொகையை பெருமளவில் குறைத்தால் பணத்தைத் தந்துவிடுகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். சுமார் 10 கோடிக்கு பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல். அந்தப் பணத்தை உடனடியாகத் தந்துவிட்டால் 'பிரதர்' திட்டமிட்டபடி வெளியாகும். இல்லையென்றால் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது என்பது கோலிவுட் தகவல்.
இதனிடையே, 'பிரதர்' படக்குழுவினர் இன்று மதியம் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளார்கள். அப்போது படத்தின் டிரைலரும் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.