இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ரியல் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங், மாதவன் நடிப்பில் சுதா இயக்கிய இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் குத்துச்சண்டை வீராங்கணையாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரித்திகா சிங். அதையடுத்து பல படங்களில் நடித்தவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த வேட்டையன் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அதோடு ஆக்சன் காட்சியிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரித்திகா சிங்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில், பெண்களின் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வு வீடியோவை அவர் பகிர்ந்து இருக்கிறார். அதில், யாராவது உங்களை தாக்க வரும்போது முதலில் அவர்களின் தாக்குதலை தடுக்க வேண்டும். அதையடுத்து அவர்களது வயிற்றிலும் கழுத்திலும் மாறி மாறி குத்த வேண்டும். பின்னர் வலதுபுறக் கழுத்தில் குத்தினால் நம்மை தாக்கும் எதிரி செயல் இழந்து விடுவார் என்று கூறி வேட்டையன் ஹூக் என்று பெயர் வைத்து இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் ரித்திகா சிங்.