'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ! | என் அம்மா அளவுக்கு என்னால் சினிமாவில் சாதிக்க முடியாது : ஜான்வி கபூர் | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு தொடங்கியது! | தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து | பிளாஷ்பேக்: சாதனைத் திரைத் தாரகைகள் சரிதா, ஷோபாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் | பாடல்களில் ஆடியே பிரபலமானேன் என்கிறார் தமன்னா | விரைவில் மறுமணம் செய்யப் போகிறாரா சமந்தா | இவர்கள் தான் எனது ரோல் மாடல் என்கிறார் சாந்தனு | நாளை ஓடிடியில் வெளியாகும் அனுஷ்காவின் காட்டி | கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” |
தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இன்னும் சில நாட்களில் இப்படத்தின் விடுபட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. பஹத் பாசில், அபிராமி, துஷாரா ஆகியோர் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். இப்போது ரித்திகா இந்த படத்தின் டப்பிங் பணிகளை துவங்கி உள்ளார்.