ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ‛மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் அலான்சியர் லே லோபஸ். அந்த முதல் படத்திலேயே அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இடையில் மீ டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த சமயத்தில் அந்த சர்ச்சையிலும் சிக்கி பிறகு மன்னிப்பு கேட்டு அதில் இருந்து மீண்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஞானவேல் இயக்கத்தில் வெளியான ‛வேட்டையன்' திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதாவது ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் இருவரும் நீதிமன்றத்தில் சந்திக்கும் காட்சியில் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இவர்தான்.
இந்த படத்தில் நடித்ததற்காக தான் ஒரு ரூபாய் சம்பளம் கூட வாங்கவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அலான்சியர் லே. இது குறித்து அவர் கூறும்போது, “இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது எனக்கு ஒரு நாள் தான் படப்பிடிப்பு இருக்கிறது என்பது தெரிந்தது. ஆனாலும் இந்த வாய்ப்பை நான் உடனே ஒப்புக்கொண்டதற்கு காரணம் இரண்டு ஜாம்பவான்களான அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்பதற்காக தான். அதனால் எனக்கு சம்பளம் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
அதே சமயம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எனக்கு மும்பை சென்று வர விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து மும்பையில் 5 ஸ்டார் ஹோட்டலிலும் என்னை தங்க வைத்து நன்கு உபசரித்தார்கள். இந்த இரண்டு நடிகர்களையும் சிறுவயதிலிருந்தே நான் பார்த்து வளர்ந்தவன் தான். இவர்கள் நிஜத்தில் அந்த மேஜிக்கை எப்படி நிகழ்த்துகிறார்கள் என்று பார்ப்பதற்காகவே இந்த படத்தில் நடித்தேன். அந்த மேஜிக்கையும் கண்கூடாகவே பார்த்தேன், மற்றபடி இந்த படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதில் எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை” என்று கூறியுள்ளார் அலான்சியர் லே.