'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மறைந்த நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த வருடத்தில் தெலுங்கில் வெளிவந்த 'தேவாரா' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார்.
ஜான்வி கபூரை கடந்த சில வருடங்களாக தமிழில் கதாநாயகியாக அறிமுகபடுத்த பல இயக்குனர்கள் முன்வந்தனர். ஆனால் அது எதுவும் கை கொடுக்கவில்லை. தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் உருவாக்கும் வெப் தொடரின் மூலம் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகிறார். இது தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகிறது. இதனை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இயக்குனர் சற்குணம் இந்த வெப் தொடரை இயக்குகிறார் என கூறப்படுகிறது.