‛ஐ யம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | மற்றுமொரு வெற்றி, கடவுளுக்கு நன்றி சொன்ன திரிஷா | ‛திரிஷ்யம் 3' - முதல் காட்சியிலேயே தவித்த ரசிகர்கள் | ஆகஸ்ட் மாதம் துவங்கும் மணிரத்னம், விஜய் சேதுபதி படம் | திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் கட்டும் ஓடிடி ரிலீஸ்...! | ‛ஏழு கடல் ஏழு மலை' படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் | அர்ஜுன் தாஸின் ‛கான் சிட்டி' ரிலீஸ் தேதி இதோ | ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர் | ‛ஜனநாயகன்' பட நிறுவன தயாரிப்பில் சூர்யா | விஜய் ஒரு சுனாமி.. அவர் ஜெயிப்பார் என தெரியும்: மிஷ்கின் |

கடந்த 2020ம் ஆண்டில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா உடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ' மூக்குத்தி அம்மன்'. இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பு கிடைத்தது. ஆர்.ஜே.பாலாஜி அடுத்து நடிகை த்ரிஷாவை வைத்து 'மாசாணி அம்மன்' எனும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வந்தது. இது மூக்குத்தி அம்மன் 2ம் பாகமாக உருவாகும் என கூறப்பட்டது. ஆனால் திடீரென வேல்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தில் நயன்தாரா நடிக்கிறார் என அறிவித்தனர். ஆனால், இந்த பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவில்லை. இவருக்கு பதிலாக சுந்தர்.சி இப்படத்தை இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.




