'கூலி' படப்பிடிப்பு நிறைவு | கவுரி கிஷன் நடித்த வெப் சீரிஸிற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு | ராஜமவுலி படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல மலையாள பாடலாசிரியர் மரணம் | டைம் ஸ்கொயரில் வெளியிடப்பட்ட எம்புரான் பட டிரைலர் | மோகன்லால் மகனை இயக்கும் பிரம்மயுகம் இயக்குனர் | ரூ.125 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன் | விஜய் சேதுபதியை இயக்கப் போகும் பூரி ஜெகன்னாத்? | ரஜினி சந்திப்பு பற்றி பிருத்விராஜ் நெகிழ்ச்சி | 700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'அரபிக் குத்து' | அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? |
ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் ‛ஜெயிலர்' போல மிகப்பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் படம் மோசம் இல்லை, நன்றாக இருக்கிறது என்பது போன்று ரசிகர்களிடமும் விமர்சிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து முதன்முறையாக நடிக்கும் வாய்ப்பை மஞ்சு வாரியர், அபிராமி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்ற நடிகைகள் பெற்றுள்ளனர். இதில் நடிகை ரித்திகா சிங் படம் முழுவதும் ரஜினியுடன் இணைந்து பயணிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து சிலாகித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரித்திகா சிங்.
இது குறித்து அவர் கூறும்போது, “படப்பிடிப்பு தளத்தில் தன்னை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையும் ரஜினிகாந்த் எந்த அளவிற்கு வசதியாக உணரும்படி செய்கிறார் என்பதை நேரிலேயே பார்த்து பிரமித்து போனேன். அவருடைய பார்வையும் அந்த புன்னகையுமே அருகில் இருப்பவர்களின் மனதில் இருக்கும் கஷ்டங்களை போக்கும் அளவிற்கு வலிமையானவை. இன்னொரு ரஜினிகாந்த் வேறு எங்கேயும் இல்லை. அவரைப் போன்ற மனிதநேயமிக்க ஜாம்பவானையும் எங்கேயும் பார்க்க முடியாது. ஒருவேளை புதிதாக ஒரு பிரபஞ்சமே படைக்கப்பட்டாலும் கூட இவர்தான் இருப்பாரே தவிர இன்னொரு தலைவர் ரஜினி இருக்கப் போவதில்லை” என்று தனது பிரமிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.