மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
பாலாஜி கேசவன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் 'எனக்கு தொழில் ரொமான்ஸ்'. இந்த படத்தின் பணிகள் நிறைவு பெற்றும் கடந்த பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடந்தது. இதில் அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம்பெருமாள், எம்.எஸ். பாஸ்கர், படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த ரொமான்ஸ் படமாக உருவாகி உள்ளது. தற்போது இப்படம் வருகின்ற நவம்பர் 15ந் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர். மேலும், இதற்கு முந்தய நாள் நவம்பர் 14ம் தேதி சூர்யாவின் கங்குவா படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.