'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் கடந்த பல மாதங்களாக 'விடாமுயற்சி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அஜித்துடன் இணைந்து அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்தது. இப்போது மீதமுள்ள படப்பிடிப்பை ஒரேகட்ட படப்பிடிப்பில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்தபடத்தில் இருந்து நடிகர் ஆரவ் லுக்கை வெளியிட்டுள்ளனர். இப்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.