பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் ஆரவ். திரைப்படத்தில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. சில படங்களில் நாயகனாக நடித்தும் அந்தப் படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. உதயநிதி நடித்த 'கலகத் தலைவன்' படத்தில் வில்லனாக நடித்தார். இந்த நிலையில் அஜித்திற்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். கலகத் தலைவன் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்திய மகிழ் திருமேனி தனது விடாமுயற்சி படத்திலும் அவரை வில்லனாக ஆக்கியிருக்கிறார்.
தற்போது வில்லன் ஆரவ்வின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. ஆரவ் வில்லனாக நடிப்பது பற்றி மகிழ்திருமேனி கூறி இருப்பதாவது : பல கதைகளுடனும் திருப்பங்களுடனும் வரும் வில்லன் மைக்கேல் நிச்சயம் உங்கள் கவனத்தைக் கவர்வான். 'மைக்கேல்' கதாபாத்திரத்தை நான் உருவாக்கி முடித்ததும், இந்தியத் துறையில் பல பெரிய நடிகர்களின் பெயர்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. ஆனால், ஆரவ்வின் திறமை பக்கம் என் மனம் சாய்ந்தது.
'கலகத்தலைவன்' படத்தின் போதே அவரது அர்ப்பணிப்பை நான் பார்த்திருக்கிறேன். அந்த விஷயம்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்ய வைத்தது. ஆரவ்வின் பெயரை அஜித் சாரிடம் நான் சொன்னபோது, "இயக்குநரின் தேர்வில் தலையிடுவதில்லை" என்று சொல்லி மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். என்னுடைய சாய்ஸ் சரியானது என்று ஆரவ்வும் நிரூபித்து இருக்கிறார். சில ஷெட்யூல் முடித்த பிறகு அஜித்தும் ஆரவ் நடிப்பு மீது தன் திருப்தியை வெளிப்படுத்தினார்" என்றார்.
'விடாமுயற்சி' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்துள்ளது. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
'விடாமுயற்சி படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, அர்ஜூன் மெயின் வில்லனாக நடிக்கிறார். ரெஜினா, நிகில், ரவி ராகவேந்திரா, சஞ்சய், தஸ்ரதி, ரம்யா, காசிம், ஜவன்ஷிர், ரஷாத் சபராலியேவ், விதாதி ஹசனோவ், துரல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார், லைகா நிறுவனம் தயாரிக்கிறது.