10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடன இயக்குனரான அமீர். அஜித்தின் 'துணிவு' படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது இன்னும் டைட்டில் வைக்கப்படாத ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
பி.டி.தினேஷ் என்ற புதுமுகம் இயக்கும் இந்த படத்தை ஸ்டெஸ் பிலிம் மேக்கர் நிறுவனத்தின் சார்பில் முகமது சமீர் தயாரிக்கிறார். அமீருடன் பிரியதர்ஷினி, ஜித்தன் ரமேஷ், இயக்குனர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரவீன் ஒளிப்பதிவு செய்கிறார் சாய்பாபாஸ்கர், அபூபக்கர் இசையமைக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது.