'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்தவர்தான் எம்ஜிஆர். ஆனால் திரைப்படங்களில் மிக அரிதாகவே பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார். அதில் முக்கியமான படம் 'காதல் வாகனம்'.
கதைப்படி ஜெயலலிதாவை வில்லன் அசோகன் கடத்திக் கொண்டு போய் கட்டி வைத்திருப்பார். அவரை மயக்கி ஜெயலலிதாவின் மீட்பதற்காக நவநாகரீக பெண் வேடம் அணிந்து கவர்ச்சியாக நடனமாடி ஜெயலலிதாவை எம்ஜிஆர் மீட்பது தான் காட்சி. இந்த பாடலைப் பாடியவர் எல்.ஆர். ஈஸ்வரி. "என்ன மேன் பொண்ணு நான்... சும்மா சும்மா பார்க்காதே" என்று ஆரம்பமாகும். எம்ஜிஆரின் ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளரான எம்.ஏ.முத்துதான் இப்பாடல் காட்சிக்காகவும் ஆடை வடிவமைத்துக் கொடுத்தவர்.
1968ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை எம். ஏ.திருமுகம் இயக்கி இருந்தார். தேவர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. கேவி மகாதேவன் இசையமைத்திருந்தார். ரொமான்டிக் லவ் ஸ்டோரியாக இந்த படம் வெளிவந்தது.