Advertisement

சிறப்புச்செய்திகள்

அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ஆர் எம் வீரப்பனால் இயக்குநர் என்ற இலக்கை எட்டிப்பிடித்த ஏ ஜகந்நாதன்

26 பிப், 2026 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Flashback-A-Jagannathan-achieves-his-goal-of-becoming-a-director-thanks-to-R-M-Veerappan
Advertisement

“ஜுபிடர் பிக்சர்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு உதவி இயக்குநராக கலைப்பணியை ஆரம்பித்து, பின் எம் ஜி ஆரின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான இயக்குநர் பா நீலகண்டன் மற்றும் இயக்குநர் டி பிரகாஷ் ராவ் ஆகியோரிடம் துணை, இணை இயக்குநராக பல படங்களில் பணிபுரிந்து, ஒரு இயக்குநருக்கான அத்தனை தகுதியும், திறமையும் உடையவராக இருந்த இயக்குநர் ஏ ஜகந்நாதன் அவர்களின் முதல் பட வாய்ப்பு கிடைத்த அனுபவமும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, படத்தை வெற்றிப் படமாக்கிய பின்னணியைப் பற்றிய பதிவுதான் இது.

“ரிக்ஷாக்காரன்” திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான மத்திய அரசு வழங்கிய “பாரத்” விருதினைப் பெற டில்லி சென்று சென்னை திரும்பிய எம் ஜி ஆருக்கு, சத்யா ஸ்டூடியோவில் பெரிய வரவேற்புக்கான விழா எடுத்திருந்தனர். பலரும் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவிற்கு கையில் மாலையுடன் சென்ற ஏ ஜகந்நாதன், எம் ஜி ஆர் வந்திறங்கியவுடன் மாலையை அவர் கழுத்தில் அணிவிக்க, அடுத்த நொடியே அந்த மாலையை அவர் கழுத்தில் அணிவித்து, நீ சீக்கிரம் இயக்குநர் ஆகவேண்டும் என வாழ்த்தியும் இருக்கின்றார் எம் ஜி ஆர். எம் ஜி ஆரின் வாக்குப்படி, அதற்கான ஒரு நல் வாய்ப்பும் இயக்குநர் ஏ ஜகந்நாதனைத் தேடி வந்தது.

எம் ஜி ஆரின் “நேற்று இன்று நாளை” திரைப்படத்தில் உதவி இயக்குநராக அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த ஏ ஜகந்நாதனிடம், சத்யா மூவீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான ஆர் எம் வீரப்பன், சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்கலாம் என்றிருக்கின்றேன். அதை நானே இயக்கலாம் என்ற யோசனையும் இருக்கிறது. “காவல்காரன்”, “கண்ணன் என் காதலன்” போன்ற நமது கம்பெனி திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கும் நீங்கள், நான் எடுக்கப் போகும் இந்த சிறிய பட்ஜெட் திரைப்படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றுவீர்களா? என கேட்டிருக்கின்றார்.

இயக்குநர் ஏ ஜகந்நாதனும் அவரிடம் வருவதாக ஒப்புக் கொண்டதோடு, தான் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் “நேற்று இன்று நாளை” திரைப்படத்தின் படப்பிடிப்பு நாட்களில் மட்டும் அங்கே சென்றுவிடுவதாக ஆர் எம் வீரப்பனிடம் கூறியதோடு, சார் படத்தை நீங்களே இயக்குவதாக முடிவு செய்துவிட்டீர்களா? என கேட்க, இப்படியும், அப்படியுமாக இருக்கிறது என ஒரு உறுதியற்ற பதிலை தந்திருக்கின்றார் ஆர் எம் வீரப்பன்.

தொடர்ந்து ஆர் எம் வீரப்பனிடம் 'ஒருவேளை உங்கள் முடிவில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு, படத்திற்கு வேறொரு இயக்குநரை நியமிப்பதாக இருந்தால் அந்த வாய்ப்பை எனக்கு கொடுங்கள் சார், நான் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன்' எனக் கூற, சிரித்துக் கொண்டே பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து சென்றிருக்கின்றார் ஆர் எம் வீரப்பன். சில நாள்களுக்குப் பின் அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை ஜெகந்நாதனுக்கே வழங்கினார் ஆர் எம் வீரப்பன். அந்த திரைப்படம்தான் அவரது முதல் திரைப்படமான “மணிப்பயல்”. 1973ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இத்திரைப்படத்தை, சென்னை மிட்லண்ட் திரையரங்கில், புரொஜக்டரை இயக்கி முதல் காட்சியை தொடங்கி வைத்தவர் மக்கள் திலகம் எம் ஜி ஆர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கேஜிஎப் 2' டீசர் 279 மில்லியன் : 'டாக்சிக் டீசர் 100 மில்லியனாவது கடக்குமா ?'கேஜிஎப் 2' டீசர் 279 மில்லியன் : ... பெண்கள் வரவேற்பை எதிர்பார்க்கும் 'தாய் கிழவி' பெண்கள் வரவேற்பை எதிர்பார்க்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap