பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பு பெற்ற படம் 'பேச்சி'. சிறிய முதலீட்டில் அடர்ந்த காட்டுக்குள் எடுக்கப்பட்ட ஹாரர் திரில்லர் படம். வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரித்திருந்தனர். அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார்.
பால சரவணன், காயத்ரி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இந்த நிகழ்வில் பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என்ற தகவலை தயாரிப்பாளர் கோகுல் பினாய் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது "ஆகஸ்ட் 1ம் தேதி திரையிடப்பட்ட 'பேச்சி' சிறப்பு காட்சியின் போதே படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால், அதை தாண்டி மாஸாக படம் ரீச் ஆகி உள்ளது. பேச்சியாக நடித்த சீனிபாட்டிக்கு நன்றி. பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள், வெரூஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் பண்ண போகிறோம், அதற்குப் பிறகு பேச்சி இரண்டாம் பாகம் உருவாகும்" என்றார்.