டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
தமிழ் சினிமாவில் இன்னமும் திருமணம் செய்யாமல் ஒரு சில நடிகர்கள் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் விஷால். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே எனது திருமணம் என கூறியிருந்தார். 9 ஆண்டுகளுக்கு பின் தற்போது அந்த கட்டிடமும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. சமீபத்தில் விஷால் கூறும்போது, ‛‛திருமணம் முடிவாகிவிட்டது. ஒரு மாதமாக தான் அந்த பெண்ணை காதலிக்கிறேன். இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் விஷால் திருமணம் செய்யப்போகும் பெண் யார் விபரம் தெரியவந்துள்ளது. அவர் வேறுயாருமல்ல நடிகை சாய் தன்ஷிகா தான். தஞ்சாவூரை சேர்ந்த சாய் தன்ஷிகா, ‛பேராண்மை' படத்தில் 5 நாயகிகளில் ஒருவராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து பரதேசி, அரவான், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். தற்போது விஷாலுக்கும் இவருக்கும் இடையே காதல் உருவாகி திருமணம் வரை முடிவாகிவிட்டதாம். ஆக., 29ல் விஷாலின் பிறந்தநாளில் இவர்களின் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில் நடைபெற உள்ளது.
சாய் தன்ஷிகா நாயகியாக நடித்துள்ள ‛யோகி டா' படத்தின் விழா இன்று(மே 19) மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த சந்திப்பில் இவர்களின் திருமண அறிவிப்பை இருவரும் வெளியிட்டனர்.