'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் உலகம் முழுக்க 235 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவே சூர்யா நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூல் என்று கூறப்படுகிறது. சசிகுமார் நடித்த ‛டூரிஸ்ட் பேமிலி' படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடி, உலக அளவில் 60 கோடியை நெருங்கி வருகிறது. இன்னமும் வசூல் வேட்டை தொடர்கிறது.
கடந்த வாரம் வெளியான படங்களில் சூரியின் மாமன் பரவாயில்லை ரகம். சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் சுமார் ரகம். விமர்சன ரீதியில் நன்றாக இருக்கிறது என்று பாராட்டப்பட்ட நவீன் சந்திராவின் லெவன் படத்துக்கு ஓரளவு பரவாயில்லை. யோகிபாபு நடித்த ஜோரா கைய தட்டுங்க தோல்வி அடைந்துள்ளது.
இந்த வாரம் விஜயகாந்த் மகன் நடித்த படைதலைவன், விஜய்சேதுபதியின் ஏஸ், டோவினோதாஸ், சேரன் நடித்த நரி வேட்டை மற்றும் வேம்பு, மையல், ஸ்கூல், அகவிழிமொழிகள், ஆக கடவன, படையாண்ட மாவீரா ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.