இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
தமிழில் பிரபு, ரேவதி நடித்த அரங்கேற்ற வேளை, முரளி நடித்த உன்னுடன், விக்ரம் நடித்த காசி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் பிரபல மலையாள தயாரிப்பாளரான அரோமா மணி. 65 வயதான இவர் நேற்று தனது இல்லத்தில் திடீரென மரணத்தை தழுவியுள்ளார். மலையாளத்தில் அதிக அளவில் படங்களை தயாரித்துள்ள இவர் கிட்டத்தட்ட தமிழையும் சேர்த்து 60 படங்களை தயாரித்து உள்ளார். ஒரு இயக்குனராக ஏழு படங்களை இயக்கியுள்ளார்.
ஒரு பக்கம் திங்களாழ்ச்ச நல்ல திவசம், தூரே தூரே ஒரு கூடு கூட்டாம் என அடுத்தடுத்த வருடங்களில் தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்த இவர் இன்னொரு பக்கம் ஒரு சிபிஐ டைரி குறிப்பு, இருபதாம் நூற்றாண்டு, கமிஷனர் எப்ஐஆர் உள்ளிட்ட கமர்சியல் படங்களையும் தயாரித்து வெற்றி பெற்றார். மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, திலீப், சுரேஷ்கோபி, பிரித்விராஜ் என பலருடைய படங்களையும் தயாரித்துள்ளார்.
குறிப்பாக மம்முட்டிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அவரை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திய ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தை தயாரித்து அதன் 5 பாகங்கள் அடுத்தடுத்து வெளியாக வித்திட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2013ல் பஹத் பாசில் நடித்த ஆர்டிஸ்ட் என்கிற படத்தை தயாரித்ததுடன் படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.