பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும், ஆராதானா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ள நிலையில் சமீபத்தில் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது இந்த குழந்தைக்கு ‛பவன்' என பெயரிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
தனது இல்லத்தில் குழந்தைக்கு நடந்த பெயர் சூட்டும் விழா தொடர்பான வீடியோவை பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் தனது மூன்று குழந்தைகள் பெயரான Aaradhana - Gugan - PAVAN என குறிப்பிட்டு ஹார்ட்டின் இமோஜியை பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.




