பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்து வெளியான 'வாத்தி' படத்தின் கதாநாயகி சம்யுக்தா. அதற்கு முன்பாக தமிழில் “களரி, ஜூலை காற்றியில்' ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் 'வாத்தி' படம்தான் அவரை தமிழிலும் பிரபலப்படுத்தியது.
'வாத்தி' படத்திற்குப் பிறகு மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்தவர் தமிழில் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது ஹிந்தியில் 'மகாராக்னி' என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் பக்கம் போனாலே ஹீரோயின்களுக்கு கிளாமர் அவசியம். கொஞ்சமாவது கிளாமர் காட்டினால்தான் வாய்ப்புகள் அதிகம் வரும்.
தெலுங்கு, மலையாளத்தில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஹிந்திப் பக்கம் சென்றுவிட்டதால் கிளாமருக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். நேற்று அவர் பகிர்ந்த சில போட்டோஷூட் புகைப்படங்களே அதற்கு சாட்சி. புடவையில் கூட இவ்வளவு கிளாமர் காட்ட முடியுமா என சில அசத்தல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.