நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஓடிடியில் வெளியான 'முதல் நீ முடிவும் நீ' படத்தில் அறிமுகமானவர் மீதா ரகுநாத். கடந்த வருடம் வெளிவந்த வெற்றிப் படங்களில் ஒன்றான 'குட் நைட்' படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். இரண்டே படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். அதற்குள்ளாக அவர் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
முன்பெல்லாம் திருமணம் செய்து கொண்டால் கதாநாயகிகளுக்கு மீண்டும் கதாநாயகியாகவே நடிக்க வாய்ப்புகள் கிடைக்காது. அக்கா, அண்ணி ஆகிய வேடங்கள்தான் கிடைக்கும். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. திருமணத்திற்குப் பிறகும் கதாநாயகியாக நடித்து வெற்றி பெற்று வருகிறார்கள் சிலர்.
திருமணத்திற்குப் பிறகு மீதா நடிப்பாரா இல்லையா என்பது சரியாகத் தெரியாமல் இருந்தது. தற்போது சித்தார்த் நடிக்க உள்ள அவரது 40வது படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் மீதா. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. '8 தோட்டாக்கள்' படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார். சரத்குமார், தேவயானி, சைத்ரா அச்சர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.