செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
பிற்காலத்தில் சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார் ஆகியோரின் துப்பறியும் நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. இதுபோல அந்த காலத்தில் துப்பறியும் கிரைம் திரில்லர் நாடகங்களை எழுதியவர்கள் வடுவூர் துரைசாமி அய்யங்கர், கே.ஆர்.ரங்கராஜூ, ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு.கோதைநாயகி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் கே.ஆர்.ரங்கராஜூவின் 'மோகன சுந்தரம்' நாவல் அதே பெயரில் திரைப்படமானது. அன்றைய ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம் தானே தயாரித்து நடித்தார். அவருடன் எஸ்.வரலட்சுமி, பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன், ஜே.பி.சந்திரபாபு, கே.சாய்ராம், வி.கே.கார்த்திகேயன், கொட்டாபுலி ஜெயராமன், வி.சுசீலா, கே.எஸ். அங்கமுத்து, ஜி.சகுந்தலா, சி.வி.வி.பந்துலு, ஜெயக்கொடி கே.நடராஜன், எஸ்.கே.வேணுபாய், எஸ்.ஆர்.லட்சுமி, வி.திருவேங்கடம், கே.எஸ்.ஹரிஹரன் உள்பட பலர் நடித்தனர். ஏடி கிருஷ்ணசாமி இயக்கினார்.
எம்.ஜி.லிங்கப்பா இசை அமைத்திருந்தார். சுமார் 30க்கும் மேற்பட்ட அன்றைய நட்சத்திரங்கள் நடித்தனர். சுமார் 3 மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் திகில் மற்றும் துப்பறியும் கதையாக ரசிகர்களை கவர்ந்தாலும் பொதுமக்களை கவரவில்லை. இதனால் சுமாரான வரவேற்பையே பெற்றது.