செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
இப்போதெல்லாம் வாய்ப்பு குறையும் நடிகைகள், வாய்ப்பு தேடும் நடிகைகள் தங்களை ரசிகர்களுக்கு நினைவூட்டுவதற்காக இசை ஆல்பங்களில் ஆடுவது புதிய டிரண்டிங். அந்த வரிசையில் தற்போது 'எண்ட ஓமனே' என்ற இசை ஆல்பத்தில் ஆடியிருக்கிறார் அஞ்சு குரியன்.
மலையாள படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த அஞ்சு குரியன் 'சென்னை டூ சிங்கப்பூர்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது இசை ஆல்பத்தில் ஆடியுள்ளார்.
அஞ்சு குரியனுடன் தர்ஷன் ஆடியுள்ளார். கார்த்திக் ஶ்ரீ இயக்கியுள்ளார். கணேசன் இசையமைத்துள்ளார். சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் பாடி உள்ளனர். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸார் நடனத்தை வடிவமைத்துள்ளார். சரிகம நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.