இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? | தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் நேற்று முன்தினம் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினார். தந்தை மம்முட்டி மருத்துவமனையில் இருப்பதால் அவர் விமர்சையாக எதுவும் செய்யவில்லை. என்றாலும் பலரும் அவருக்கு தங்கள் சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். இதில் மலையாள இளம் நடிகையும், இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிஸி தம்பதியின் மகளுமான கல்யாணி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவு பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
அவர் தனது வாழ்த்து பதிவில் ''துல்கரின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் நிறைய எழுதி நீண்ட பதிவினைப் பதிவிட்டு வாழ்த்துத் தெரிவிப்பேன். திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்விலும் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பவர் துல்கர். கடந்த 5 ஆண்டுகளாக எனக்கு எந்தப் பிரச்னை என்றாலும் முதலில் எனக்காக வந்து நிற்பது, அறிவுரைகள் வழங்குவது அவராகத்தான் இருக்கும்.
நான் தனியாக உணர்ந்ததில்லை அதற்குக் காரணம் துல்கர்தான். அவர் இல்லையென்றால் நான் என்னவாகிருப்பேன் என்றே எனக்குத் தெரியாது. அந்த அளவிற்கு எல்லா தருணங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளாக கல்யாணி என்ன பிரச்னைகளை சந்தித்து வருகிறார். அதற்கு துல்கர் எந்த அளவிற்கு உதவி உள்ளார் என்பது குறித்த கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
5 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணியும், துல்கர் சல்மானும் 'வரணே அவசியமுண்டு' என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் முதல் இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.