தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
திரையரங்கில் வரவேற்பைப் பெற்று, பலரது கவனத்தையும் ஈர்த்த படம் முதல் இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல் நீண்டுள்ளது.
3பிஎச்கே
நடிகர் சரத்குமார், சித்தார்த், நடிகை தேவயானி, சைத்ரா, மீதா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்து இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் '3பிஎச்கே'. சாமானியனின் வீடு வாங்கும் கனவு நிறைவேறியதா, இல்லையா என்பதை அழகான திரைக்கதையுடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் நாளை(ஆக.1ம் தேதி) அமேசான் ப்ரைம், சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கட்ஸ்
இயக்குநர் ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ருதி நாராயணம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'கட்ஸ்'. த்ரில்லர் கதையம்சத்துடன் வெளியான இந்த திரைப்படம் நாளை(ஆக.1ம் தேதி) டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சக்ரவ்யூகம் - தி டிராப்
கொலை வழக்கைச் சுற்றி நடக்கும் சுவாரசிய சம்பவங்களை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் 'சக்ரவ்யூகம் - தி டிராப்'. இயக்குநர் சேத்குரி மதுசூதனன் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை(ஆக.1ம் தேதி) வெளியாகிறது.
சூப்பர் ஜிந்தகி (Super Zindagi)
காமெடி கதைக்களத்தைக் கொண்டு கடந்தாண்டு வெளியாகி வெற்றிபெற்ற மலையாள திரைப்படம் 'சூப்பர் ஜிந்தகி'. இந்த திரைப்படம் நாளை(ஆக.1ம் தேதி) மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
சுரபில்லா சுந்தர சொப்னம் (Surabhila Sundara Swapnam)
மலையாள இயக்குநர் டானி மேத்யூ இயக்கத்தில் காமெடி, த்ரில்லர் கதையம்சத்தில் உருவான திரைப்படம் 'Surabhila Sundara Swapnam'. இந்த திரைப்படம் நாளை(ஆக.1ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பகாய்டி (Bakaiti)
இந்தி இயக்குநர் அமித் குப்தா இயக்கத்தில் வெளியான வெப் தொடர் 'பகாய்டி'. பொருளாதார சிக்கலில் இருக்கும் குடும்பம் அதை எவ்வாறு சமாளிக்கிறது என்பதைக் கதைக்களமாகக் கொண்டு இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்தி, தமிழ், கன்னடம் மொழிகளில் உருவான இந்த வெப் தொடர் நாளை(ஆக.1ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
தேங்யூ டியர்
தெலுங்கு இயக்குநர் தொட்டா ஸ்ரீகாந்த் குமார் இயக்கத்தில் உருவான காதல் திரைப்படம் 'தேங் யூ டியர்'. இந்த திரைப்படம் ஈடிவி வின் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகிறது.
ஜின் (Jinn)
நடிகர் முகின் ராவ் நடிப்பில் தமிழில் வெளிவந்த திரைப்படம் 'ஜின்'(Jinn). நடிகை வடிவுக்கரசி, பால சரவணன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நாள் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை(ஆக.1ம் தேதி) வெளியாகிறது.
தம்முடு (Thammudu)
தெலுங்கில் தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளிவந்த ஆக்சன் திரைப்படம் 'தம்முடு'. இந்த திரைப்படம் நாளை(ஆக.1ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.