சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது காதலியும், நடிகையுமான பவித்ரா கவுடாவிற்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என அவரை கொலை செய்ததாக கூறப்படும் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆரம்பத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் அங்கே முறைகேடாக பல வசதிகளை பெற்றதாக தெரியவந்த நிலையில் பின்னர் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
அதன்பிறகு பலமுறை தர்ஷன் ஜாமின் விண்ணப்பித்தும் அவை நிராகரிக்கப்பட்டது. ஒரு வழியாக கடந்த டிசம்பர் மாதம் நிபந்தனையுடன் ஜாமின் பெற்றார் தர்ஷன். அவருடன் பவித்ரா கவுடா உள்ளிட் 7 பேரும் ஜாமின் பெற்றனர். இந்நிலையில் இந்த 7 பேருக்கும் வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்தமாதம் நிறைவடைந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிபகள் மகாதேவன், பர்திவாலா அடங்கிய அமர்வு முன் வந்தது.
அப்போது சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை, சாட்சிகள் மிரட்டப்பட கூடும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், தர்ஷன் உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதனால் தர்ஷன் மீண்டும் சிறை செல்ல உள்ளார்.