ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கும் இந்த படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன், சுருக்கமாக எல்.ஜ.சி என தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் மற்றும் கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் தொடங்கியது. இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சீமான் நடிகராக முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்போது எல்.ஜ.சி படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா வேடத்தில் சீமான் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயியாக அவர் நடிக்கின்றாராம். இதன் படப்பிடிப்பு வெள்ளியங்கிரியில் அனுமதி பெற்று நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.