உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் 'அனிமல்'. இப்படம் அப்போதே தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவந்தது.
படம் வெளியான போது ரன்பீர், ராஷ்மிகா, பாபி தியோல் ஆகியோர் சென்னைக்கு வந்து கூட படத்தின் புரமோஷனை செய்தார்கள். ஆனால், இங்கு தமிழில் படம் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை. ஹிந்தி பதிப்பையும் தமிழ் ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் இப்படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் தமிழ் பதிப்பைப் பலரும் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். அதனால், கடந்த சில தினங்களாக 'அனிமல்' பற்றி சர்ச்சையான விமர்சனங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
ஆணாதிக்க கதாநாயகன், மற்ற கதாபாத்திரங்கள் பெண்களை கேவலமாக சித்தரித்துள்ள படம் என கடும் எதிர்ப்புகள் படத்திற்குக் கிளம்பியுள்ளது.
இங்கு இப்போது இவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், 900 கோடி வசூலைக் கடந்துள்ளது இந்தப் படம். அதோடு சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பு, சிறந்த பின்னணி இசையமைப்பு, சிறந்த பின்னணிப் பாடகர் என 4 பிலிம்பேர் விருதுகளை இப்படம் வென்றுள்ளது.