ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
பரத் நடிப்பில் 2019ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் காளிதாஸ். இப்போது 'காளிதாஸ் 2 ' உருவாகி உள்ளது. இந்த படத்தின் டீசரை நடிகர்கள் ரவி மோகன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்து வெளியிட்டுள்ளனர். 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காளிதாஸ் 2' உருவாகி உள்ளது.
பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி உட்பட பலர் நடிக்கிறார்கள். 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா இதில் முக்கியமான வேடத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார். சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். முதற்பாகம் போலவே இதுவும் திரில்லர் பின்னணியில் நகர்கிறது. விடுதலை படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த பவானிஸ்ரீ, காளிதாஸ் 2வில் போலீசாக வருகிறார். சில ஆண்டுகளாக வெற்றிக்காக காத்திருக்கும் பரத் இந்த படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.