ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து | விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா நெகிழ்ச்சி செயல்! | கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய ப்ரியங்கா நல்காரி | இவ்வளவு வைரலாகும் என நினைக்கவேயில்லை : தர்ஷனா | டீச்சராக மாறி வகுப்பெடுக்கும் கேப்ரில்லா செல்லஸ் | திடீர் இயக்குனரான ஜோதி கிருஷ்ணா | ஒரு நொடி இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் | 22 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கிய கே.ரங்கராஜ் |
சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பின்பு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை தற்போதைய டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி வரும் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 1995ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு நடிப்பில் வெளியான முத்து திரைப்படமும் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
முத்து பட ரிலீஸ் சமயத்தின் போது இருந்த அதே வரவேற்பு இப்போது இந்த படத்தின் ரீ ரிலீஸுக்கும் கிடைத்து வருகிறது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் படத்தின் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், கதாநாயகி மீனா உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்வின் போது ரசிகர்களுடன் பேசிய கே.எஸ் ரவிக்குமார் அடுத்ததாக படையப்பா திரைப்படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.