குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில் கடைசியாகக் வெளிவந்த கோப்ரா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என அடுத்து எந்த முன்னனி நடிகர்களும் இவர் இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை.
இதனால் தான் ஏற்கனவே இயக்கிய டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை அருள்நிதியை வைத்து இயக்கியுள்ளார். இதன் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் இன்னும் இப்படம் வெளியாகவில்லை. இது அல்லாமல் விரைவில் ஓடிடி தளத்திற்காக பூஜா ஹெக்டேவை வைத்து புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்குவதற்காக ஜூனியர் என்டிஆர் உடன் தற்போது பேச்சுவார்த்தையை அஜய் ஞானமுத்து தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.