பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் |
சென்னை : சென்னை துரைப்பாக்கத்தில் 6 அடி உயர வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா, கணவர், இரட்டைக் குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை நேற்று(டிச.,05) உடைந்தது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இங்கு தான் நடிகை நமீதா குடியிருக்கிறார். 6 அடி உயர வெள்ளத்தில் ஒரு வயதான இரட்டை குழந்தைகளுடன் சிக்கினார்.
அப்பகுதியில் இருப்பவர்களை மீட்க இதுவரை மீட்பு குழுவினர் வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா, கணவர், இரட்டைக் குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் இன்று(டிச.,06) பத்திரமாக மீட்டனர்.