‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! |
பான் இந்தியா ரிலீஸ் என்பது பெரிய நடிகர்களின் படங்களுக்கோ, பிரம்மாண்டமாகத் தயாராகும் படங்களுக்கோ தற்போது நடப்பது டிரென்ட் ஆகிவிட்டது. அந்த விதத்தில் ஜுன் மாதத்தில் 5 பான் இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. தமிழில் இரண்டு, தெலுங்கில் மூன்று என இரண்டு மொழிப் படங்களிலும் அது நடக்க இருக்கிறது.
ஜுன் 5 - தக் லைப்
கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்ய லெட்சுமி, அபிராமி, நாசர் உள்ளிட்டவர்கள் நடிக்க ஏஆர் ரகுமான் இசையமைப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம். குழந்தை நட்சத்திரங்களாக இருந்து கதாநாயகனாக உயர்ந்த கமல்ஹாசன், சிம்பு இந்தப் படத்தில் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். 80களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் கமல். 80களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சிம்பு. மாறுபட்ட ஒரு கூட்டணியாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் பான் இந்தியா அளவில் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப் போகிறது என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஜுன் 12 - ஹரிஹர வீர மல்லு
தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18, கேடி, ஊ லலலா' படங்களை இயக்கிய ஏஎம் ஜோதிகிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண், பாபி தியோல், நிதி அகர்வால், சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருக்கும் படம். தெலுங்கில் 'ஆக்சிஜன், ரூல்ஸ் ரஞ்சன்' படங்களுக்குப் பிறகு ஜோதி கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயக்குனரான கிரிஷ் இந்தப் படத்தை முதலில் இயக்கினார். பின்னர் அவர் இந்தப் படத்திலிருந்து விலக படத்தின் தயாரிப்பாளரான ஏஎம் ரத்னம், தனது மகன் ஜோதிகிருஷ்ணாவையே படத்தை இயக்க வைத்தார். பவன் கல்யாண் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திர துணை முதல்வர் ஆனதால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளித் தள்ளிப் போனது. ஒரு வழியாக முடிந்து ஜுன் 12 வெளியீடு என அறிவித்துள்ளார்கள். தேர்தல் வெற்றிக்குப் பிறகு பவன் கல்யாண் நடித்து வெளிவர இருக்கும் படம்.
ஜுன் 20 - குபேரா
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம். தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்த தனுஷ் அப்படியே ஹிந்திப் பக்கம் சென்று அங்கும் தன்னைப் பற்றிப் பேச வைத்தார். 'வாத்தி' படம் மூலம் தெலுங்கிலும் நேரடியாக நடித்து வரவேற்பைப் பெற்றார். அதற்குப் பிறகு மீண்டும் தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தில் நடித்தார். தனது மாறுபட்ட படங்களால் மொழியைக் கடந்து பார்க்கப்பட்டவர் சேகர் கம்முலா. அவருடன் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா என ஒரு அசத்தல் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. தமிழ், தெலுங்கு ஆகியவற்றைக் கடந்து ஹிந்தியிலும் இப்படம் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் உள்ளவர்கள் பலரும் ஹிந்தியிலும் வரவேற்பைப் பெற்றவர்கள் என்பதே அதற்குக் காரணம்.
ஜுன் 27 - கண்ணப்பா
'பாகுபலி 1, 2' சரித்திரப் படங்களாக அமைந்து வசூலைக் குவித்ததைத் தொடர்ந்து முக்கிய மொழிகளில் சரித்திரப் படங்களை உருவாக்க ஆரம்பித்தனர். 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் பற்றிய படமாக இப்படம் உருவாகி உள்ளது. தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய குடும்பமான நடிகர் மோகன்பாபு படத்தைத் தயாரிக்க அவரது மூத்த மகன் விஷ்ணு மஞ்சு படத்தின் கதையை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் ஸ்டீபசன் தேவஸ்ஸி இசையமைப்பில் இப்படத்தில் 'கண்ணப்பா' கதாபாத்திரத்தில் விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். மோகன் பாபு, சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்ளிட்டோருடன் மோகன்லால், பிரபாஸ், அக்ஷய்குமார், காஜல் அகவர்வால் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
ஜுன் மாதம் பள்ளித் திறப்பு, கல்லூரிகளுக்கான சேர்க்கை என குடும்பத்தினர் அனைவரும் அதில்தான் மும்முரமாக இருப்பார்கள். அதற்கான செலவுகள் பற்றித்தான் அவர்களது மனதில் திட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அடுத்தடுத்து இப்படி நான்கு பான் இந்தியா படங்கள் வருவதை அவர்கள் பார்க்க நேரம் ஒதுக்குவார்களா என்ற கேள்வியும் எழுகிறது. இளைஞர்கள்தான் படங்களைப் பார்க்க அதிகம் வருகிறார்கள் என்று சொன்னாலும் குடும்பத்தினர் அனைவரும் வந்தால் மட்டுமே பலப்பல கோடிகளில் வசூலை அள்ள முடியும்.