மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
மலையாள திரையுலகில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ‛2018' என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜூடு ஆண்டனி ஜோசப். அந்த படத்தில் கேரளாவில் மழை வெள்ளத்தால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை தத்துரூபமாக படமாக்கி இருந்தார். எப்போதுமே ஜூன், ஜூலை மாதங்களில் கேரளாவில் மழை சீசன் துவங்குவதால் வேலைக்கு செல்பவர்கள் முதற்கொண்டு பள்ளி மாணவர்கள் வரை அனைவருமே மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் என்கிற பேச்சு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
சமீபத்தில் கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிக்கூடங்களை திறந்து விட்டு அதற்கு பதிலாக ஜூன், ஜூலை மாதங்களில் லீவு விடலாமா என பொதுமக்களிடம் ஒரு கருத்து கேட்பை முன் வைத்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஜூடு ஆண்டனி ஜோசப் மற்றும் ‛ஒரு அடார் லவ்' படத்தின் இயக்குனர் ஓமர் லுலு, ஆகியோர் ‛‛ஏப்ரல் மே என்கிற சம்மர் சீசனை பள்ளி நாட்களாக வைக்கத் தேவையில்லை, அவை விடுமுறையாகவே இருக்கட்டும், அதற்கு பதிலாக ஜூன் ஜூலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கலாம் இல்லையென்றால் கொரோனா காலகட்டம் போல மாணவர்களுக்கு இந்த இரண்டு மாதங்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி பாடங்களை கற்பிக்கலாம். இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும்'' என்று ஆலோசனை கூறியுள்ளனர். அனேகமாக இந்த வருடம் இதுகுறித்து கேரள அரசு ஒரு முக்கிய முடிவு எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.