நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கே பற்றிய பயோபிக் படத்தை எடுக்கப் போவதாக 2023ல் அறிவிப்பை வெளியிட்டிருந்தார் தெலுங்கு இயக்குனரான ராஜமவுலி. அந்தப் படத்திற்கு 'மேட் இன் இந்தியா' என்ற பெயரையும் வைத்திருந்தனர். அதில் பால்கே கதாபாத்திரத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக சில தினங்களாக செய்திகள் வந்தன.
அதேசமயம், பால்கே பற்றிய பயோபிக் படத்தின் வேலைகளில் கடந்த சில வருடங்களாகவே ஹிந்தி இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி, அமீர்கான் நடிக்க ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்டார்கள் என்ற செய்தியும் சில நாட்களாக சுற்றி வருகிறது.
ஒரே நேரத்தில் இரண்டு பேர் இப்படி ஒருவரது பயோபிக் படத்தை எடுப்பது சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் பால்கேவின் பேரன் சந்திரசேகர் ஸ்ரீகிருஷ்ண புசல்கர், சமீபத்திய பேட்டி ஒன்றில் ராஜமவுலியை விமர்சித்துள்ளார்.
“ராஜமவுலி படம் குறித்து நானும் கேள்விப்பட்டேன். ஆனால், அவர்களது தரப்பிலிருந்து, ராஜமவுலியோ, அல்லது அவரது குழுவினரோ ஒருவர் கூட என்னை இன்னும் சந்திக்கவில்லை. பால்கேஜி பற்றிய படத்தை யார் எடுக்க நினைத்தாலும் அவர்கள் பால்கே குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். எங்களிடம்தானே உண்மையான கதை இருக்கிறது.
அதே சமயம் ராஜ்குமார் ஹிரானி குழுவில் உள்ளவர்களும் படத்தின் உதவி தயாரிப்பாளரும் என்னுடன் கடந்த மூன்ற வருடங்களாக தொடர்ந்து தொடர்பில் உள்ளார்கள். எங்களது நம்பிக்கையைப் பெற அவர்கள் முயற்சி எடுத்தார்கள். தொடர்ந்து வருவது, ஆராய்ச்சியில் ஈடுபடுவது, எங்களிடம் பல கேள்விகளைக் கேட்பது என இருந்தார்கள். அவர்களிடம், 'தொடருங்கள்… நீங்கள் மனமார உழைக்கிறீர்கள், எனக்கு ஆட்சேபனை இல்லை,” என அவர்களிடம் தெரிவித்தேன், ” என்று கூறியுள்ளார்.
பால்கே கதாபாத்திரத்தில் அமீர் கான் நடிப்பதை விரும்பும் சந்திரசேகர், படத்தில் பால்கேவின் மனைவி சரஸ்வதிபாய் பால்கே கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையையும் சொல்லி இருக்கிறாராம்.
அவரது பேட்டி தற்போதுள்ள சர்ச்சையில் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பால்கே குடும்பத்தினரை ராஜமவுலி இதுவரை சந்திக்கவில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.