மோதிரக் கையால் குட்டுப்பட்டு கதாநாயகியாக அறிமுகமாகும் மகேஷ்பாபுவின் சகோதரர் மகள் | ‛தி ராஜா சாப்' பட சம்பள பாக்கி விவகாரம் ; தயாரிப்பாளர் விளக்கம் | தொடர்ந்து ஆர்வத்தை தூண்டும் மம்முட்டியின் ‛கலம்காவல்' பட போஸ்டர்கள் | டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் |
தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படத்தின் மூலம் இங்கு தயாரிப்பில் இறங்கியது தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்தப் படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் லாபத்தைக் கொடுத்த படம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'லவ் டுடே, டிராகன்' நடிகரான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க 'டூட்' படத்தை அடுத்து தயாரித்து வருகிறது. தொடர்ந்து தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் அந்நிறுவனம் புதிய படங்களைத் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்துடனும் பேசி வருவதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 'மென்டல் மதிலோ, அன்டே சுந்தரநிகி, சரிபொத சனிவாரம்' ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குனரான விவேக் ஆத்ரேயா அந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் ஒரு தகவல்.
ரஜினிகாந்த் தற்போது 'கூலி' படத்தில் நடித்து முடித்துவிட்டு, 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரை வைத்து படம் தயாரிக்க வேல்ஸ் நிறுவனம் பேசி வருவதாகவும், கார்த்திக் சுப்பராஜ் அதை இயக்கலாம் என்றும் தகவல் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. தற்போது தெலுங்கு நிறுவனம், இயக்குனர் பெயரும் அடிபடுகிறது. யாருக்கு முன்னுரிமை என்பது விரைவில் தெரிய வரும்.