'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குவது மட்டுமல்லாது, தென்னிந்திய சினிமாவிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகை எனப் பெயரெடுத்தவர் நயன்தாரா. பாலிவுட் நடிகைகள் இங்கு அதிக சம்பளம் வாங்குவது வேறு.
ஒரு இடைவெளிக்குப் பின் தெலுங்கு சினிமாவில் நயன்தாரா நடிக்க இருப்பதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று ஒரு வீடியோ மூலம் வெளியிட்டிருந்தனர். தமிழில் நெல்சன், அனிருத் கூட்டணி அப்படியான வீடியோக்களை சுவாரசியமாக வெளியிட்டு ஒரு 'டிரெண்ட்' செய்துவிட்டனர். அதில் அவ்வளவு ரசனை இருக்கும்.
தெலுங்கில் முன்னணி இயக்குனராகக் கருதப்படும் அனில் ரவிப்புடி இயக்க, சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கப் போவது பற்றிய அறிவிப்பை இன்று வீடியோவாக வெளியிட்டிருந்தார்கள். சுவாரசியமாக சிறப்பாக எடுப்பதாக நினைத்து ஒரு 'மொக்கை' கான்செப்ட்டில் டிவி நிகழ்ச்சிக்கு எடுப்பது போன்ற ஒரு வீடியோவாக அதை வெளியிட்டிருக்கிறார்கள்.
சரி, இந்த வீடியோ எப்படி இருந்தால் என்ன 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் போல இந்தப் படத்தையும் வசூல் படமாக அனில் ரவிப்புடி எடுக்கட்டும்.




