தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படம் எப்போது ரிலீஸ் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், படப்பிடிப்பு பாக்கி இருப்பதாலும், ஓடிடி, சாடிலைட் வியாபாரம் இன்னும் முடிவடையாத காரணத்தாலும் தீபாவளிக்கு கருப்பு வெளியாக வாய்ப்பு இல்லை என்கிறார்கள். புதிய தேதியையும் அறிவில்லை.
இந்த ஆண்டு தீபாவளிக்கு துருவ் விக்ரம் நடிக்க, மாரி செல்வராஜ் இயக்கும் பைசன், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டியூட் படங்கள் வருவது உறுதியாகி உள்ளது. கார்த்தி நடிக்கும் சர்தார் 2, விக்னேஷ் சிவனின் எல்ஐகே வர வாய்ப்பு தான் என்றாலும் அதுவும் தள்ளிப்போகலாம்.
ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு வரவில்லை. விஜய்சேதுபதி நடித்த டிரைன் தீபாவளிக்கு வருமா என்பதும் தெரியவில்லை. இந்த ஆண்டு தீபாவளிக்கு பெரிய ஸ்டார்கள் படம், பெரிய பட்ஜெட் வராதது பலருக்கும் ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.