நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள முதல் படம் மார்கழி திங்கள். இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஷியாம் - ரக்ஷனா என்ற புது முகங்கள் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் பாரதிராஜா , சுசீந்திரன் மற்றும் அப்பு குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கிராமத்து காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
காதலால் ஏற்படும் பிரச்னைகளும், அந்த பிரச்னைகளில் இருந்து காதலர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது டீசரை பார்க்கும்போது தெரிகிறது. அதோடு நம்ம காதலை எனது தாத்தாவிடம் சொல்லப்போகிறேன் என்று நாயகி கூற, அதைக் கேட்ட நாயகன், தாத்தாவிடம் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா? என்று அதிர்ச்சியுடன் ஒரு கேள்வி கேட்பதோடு இந்த டீசர் முடிவடைகிறது.