20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி | பிளாஷ்பேக்: கலைஞர்கள் பேசாமல், பார்வையாளர்கள் பேசிய மவுனத் திரைப்படம் “பேசும்படம்” | 15 ஆண்டுகளுக்குபின் மங்கத்தா ரீ ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் போடும் திட்டம் |

அசோக் வேலாயுதம் என்பவர் இயக்கத்தில் அஞ்சலி கதையின் நாயகியாக நடித்து வரும் படம் ஈகை. இது அவரது ஐம்பதாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார். சமீபத்தில் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. அப்போது நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு கொரில்லாவுடன் இணைந்து சில காட்சிகளில் நடித்திருக்கிறார் அஞ்சலி. அதையடுத்து சென்னை திரும்பி உள்ள ஈகை படக்குழு, விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளது. ஈகை படம் தவிர ராம்சரணை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்சர் என்ற படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் அஞ்சலி.